செய்திகள்
சென்னை நகர மக்களை அனுமதிக்க கூடாது- தண்டோரா மூலம் அறிவிப்பு
மதுராந்தகம் மற்றும் செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் சென்னை நகர மக்களை அனுமதிக்க கூடாது என்று தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
மதுராந்தகம்:
சென்னையில் கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளது. சென்னை நகர மக்கள் மூலம் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சம் பலரிடம் உள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சில கிராமங்களில் தண்டேரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த அறிவிப்பில் சென்னை நகர மக்களை மதுராந்தகம் செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதிக்க கூடாது.
அவ்வாறு அவர்களை அனுமதித்தால் அவர்களையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களையும் போலீசார் கடுமையாக தண்டிப்பார்கள். இவ்வாறு தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது.