செய்திகள்
மரணம்

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்

Published On 2020-06-20 12:47 IST   |   Update On 2020-06-20 12:47:00 IST
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அச்சரப்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்தலசயனம் பட்டாச்சாரியார் (வயது 72). இவர் அங்குள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலின் பரம்பரை அர்ச்சகராகவும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைகானச ஆகம சாஸ்திர தேர்வு அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

கடந்த ஒரு வாரமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்தலசயனம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

அன்றைய தினம் அவரது இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது அவரது மனைவி வேதவள்ளியம்மாள் (65) கணவர் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News