செய்திகள்
தனிமைப்படுத்துதல்

ஆம்பூர், வாணியம்பாடிக்கு திரும்பிய 18 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

Published On 2020-05-22 16:58 IST   |   Update On 2020-05-22 16:58:00 IST
டெல்லி மாநாட்டில் பங்கேற்று ஆம்பூர், வாணியம்பாடிக்கு திரும்பிய 18 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஆம்பூர்:

டெல்லி பப்ளிக் மாநாட்டில் பங்கேற்ற ஆம்பூரை சேர்ந்த 16 பேர், வாணியம்பாடியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 18 பேர் நேற்று விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வேன் மூலம் அவர்கள் நேற்று இரவு ஆம்பூர், வாணியம்பாடி வந்தனர்.

சுகாதாரத் துறையினர் அவர்களை ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் உள்ள அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Similar News