செய்திகள்
கொரோனா வைரஸ்

சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் பெண்ணுக்கு கொரோனா தொற்று

Published On 2020-05-09 19:25 IST   |   Update On 2020-05-09 19:25:00 IST
சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத்துறையினர் அப்பெண்ணை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இவர் கர்ப்பிணியான தனது மகள் பிரசவத்துக்காக சிதம்பரத்தில் ஓர் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு கர்ப்பிணியை கொரோனா சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் அவருக்கு தொற்று இல்லை. மகளுக்கு உறுதுணையாக இருப்பதால் தானாக முன்வந்து தாயும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கடந்த 6-ந்தேதி சென்றுள்ளார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று சுகாதாரத்துறையால் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணை பாதுகாப்பாக ஆம்புலன்சு மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் அக்கிராமத்தில் தடுப்புகள் அமைத்து சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர்

Similar News