செய்திகள்
வாகன சோதனை

சென்னையில் இருந்து திரும்பியவர்களுக்கு கொள்ளிடம் சோதனை சாவடியில் மருத்துவக்குழு முத்திரை

Published On 2020-05-08 16:56 IST   |   Update On 2020-05-08 16:56:00 IST
சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருக்கடையூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 கார்களில் சென்ற 15 பேரை கொள்ளிடம் சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுத்து நிறுத்தி அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்துதனர்.

சீர்காழி:

சென்னையிலிருந்து பலர் கொள்ளிடம் வழியே தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றனர். சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருக்கடையூர், காரைக்கால், மணிக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 கார்களில் சென்ற 15 பேரை கொள்ளிடம் சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுத்து நிறுத்தி அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்துதனர்.

அனைவரின் கைகளிலும் கொரோனா சோதனை செய்ததற்கான முத்திரை குத்தி அவர்கள் செல்லும் ஊரில் உள்ள அவரவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அதனை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

Similar News