செய்திகள்
நேந்திரன் வாழைக்காய்

நேந்திரன் வாழைக்காய் கொள்முதல்- வேளாண்துறை சிறப்பு ஏற்பாடு

Published On 2020-04-22 15:21 IST   |   Update On 2020-04-22 15:21:00 IST
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் தோட்டத்துக்கே நேரடியாக சென்று நேந்திரன் வாழைக்காய்களை வேளாண் வணிகத்துறையினர் கொள்முதல் செய்து வருகிறார்கள்.
திருப்பூர்:

வேளாண் வணிகத்துறை உதவி அலுவலர் அன்பழகன் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது நேந்திரன் வாழை அதிக அளவில் விளைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் வாகனங்கள் கிடைக்காததால் தங்கள் தோட்டங்களில் விளைந்த வாழைக்காய்களை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் வேளாண் வணிகத்துறையினர் விவசாயிகளின் தோட்டத்துக்கே நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருகிறார்கள்.

கடந்த வாரம் ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய் ரூ.15-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.10 உயர்த்தி ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். விவசாயிகள் 97861 70212 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News