செய்திகள்
கொரோனா வைரஸ்

முத்துப்பேட்டையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 2 பேர் வசிக்கும் பகுதியில் ஆய்வு

Published On 2020-04-22 14:01 IST   |   Update On 2020-04-22 14:01:00 IST
முத்துப்பேட்டையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 2 பேர் வசிக்கும் பகுதியில் திருவாரூர் மாவட்ட சப்-கலெக்டர் கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்து தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டெல்லி சென்று திரும்பிய 4 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கபட்டதையடுத்து கூடுதலாக அவர்கள் வசித்த பகுதி சுற்றிலும் அடைக்கப்பட்டு 15 தினங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பால் மற்ற பகுதிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் வசித்து வந்த வீடுகள், அப்பகுதிகளான காளியம்மன் கோவில் தெரு, நியூ பஜார் சீத்தாவாடி சந்து, பேட்டை சாலை ஆகிய பகுதிகளை திருவாரூர் மாவட்ட சப்-கலெக்டர் கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்து தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.

பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன், வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News