செய்திகள்
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

ரேசன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருட்கள்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

Published On 2020-04-22 13:30 IST   |   Update On 2020-04-22 13:30:00 IST
ஆரணிடவுன் வைகை கூட்டுறவு சங்கம் சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய் மதிப்பீல் மளிகை தொகுப்பு பை வழங்குவதை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
ஆரணி:

ஆரணிடவுன் வைகை கூட்டுறவு சங்கம் சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய் மதிப்பீல் மளிகை தொகுப்பு பை வழங்குவதை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

இதையடுத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது-

திருவண்ணாமலை மாவட்ட அளவில் கொரோனாநோய் பாதிப்பு 10 பேரில் தற்போது 8பேர் குணமடையும் தருணத்தில் உள்ளனர். இன்னும் 4 நாட்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். மற்ற 2 பேரை தீவிர கண்காணிக்கப்படுவார்கள்.

இன்னும் சில தினங்களில் நமது மாவட்டத்திற்கு ரேபிட் கிட் அதிகளவில் கிடைத்தவுடன் முதல் கட்ட அளவில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.

மாவட்ட அளவில் அத்தியாவசிய மளிகை பொருட்கள் வீடு தேடி சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளன. தற்போது வரையில் நமது மாவட்ட அளவில் மளிகை பொருட்கள் பற்றாக்குறை இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க துணை தலைவர் பாரிபாபு, நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட பத்திரபதிவு அலுவலர் சரவணன், ஆரோக்யாராஜ், பிரேம், ஓன்றிய செயலாளர்கள் சேகர், வேலு, மாவட்ட பாசறை செயலாளர் கஜேந்திரன், வைகை கூட்டுறவு சங்க துணை தலைவர் குமரன் பையூர் சதிஷ், வேலப்பாடி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News