செய்திகள்
காய்கறிகள்

வேலூரில் காய்கறி விலை குறைந்தது

Published On 2020-03-25 11:41 GMT   |   Update On 2020-03-25 11:41 GMT
வேலூரில் நேற்று இரவு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் இன்று ஒரே நாளில் காய்கறிகள் ரூ.10 முதல் ரூ.15 வரை குறைந்துள்ளது.
வேலூர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து வேலூருக்கு வரும் வாகனங்கள் அடியோடு நிறுத்தப்பட்டன.

இதேபோல் வேலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் லாரி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்தது மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்து வந்தது.

நேற்று இரவு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் இன்று ஒரே நாளில் காய்கறிகள் ரூ.10 முதல் ரூ.15 வரை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ.15ஆக குறைந்தது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.

வேலூர் மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் விலை நிலவரம் வருமாறு:-

தக்காளி (ஒரு கிலோ )ரூ.15, வெங்காயம் ரூ.30, கேரட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.30, கத்தரிக்காய் ரூ.30, முருங்கைக்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.30, வெண்டைக்காய் ரூ.40-க்கு விற்பனையானது.

காய்கறி கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் பொதுமக்கள் மார்க்கெட்டில் அதிகளவில் கூட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News