செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2020-03-18 15:55 IST   |   Update On 2020-03-18 15:55:00 IST
ஈரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் அசோகபுரம், திருநகர் காலனி மின் பாதைகளில் உயர் அழுத்த மின் புதைவடம் கம்பிகளை மின் கம்பங்கள் மேல் பொருத்தும் பணி மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

இதையொட்டி நாளை (19-ந் தேதி) மற்றும் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

வி.சி.டி.வி. ரோடு, வீரபத்திரா வீதி, ஏ.பி.டி. ரோடு, காவேரி ரோடு, முனி சிபல் காலனி, அண்ணாமலை லே-அவுட், 16 ரோடு, வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லூரி, தேவராயன் காடு.

வி.சி.டி.வி. ரோடு, மாதவக்காடு, சிந்தன் நகர், கமலா நகர், கிருஷ்ணம் பாளையம், கக்கன் நகர், வி.ஜி.பி. நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம் ராம்மூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், வண்டியூரான் கோவில் பகுதி.

இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News