செய்திகள்
கோப்பு படம்

மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை - தண்டோரா அடித்து வனத்துறை எச்சரிக்கை

Published On 2020-03-09 16:31 IST   |   Update On 2020-03-09 16:31:00 IST
குடியாத்தம் அருகே விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தண்டோரோ அடித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அருகே குடுமிப்பட்டியில், வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க விவசாய நிலத்தை சுற்றி அமைத்த மின் வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் அருகே மர்ம நபர்கள் அமைத்த மின் வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று இறந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, மாவட்ட உதவி வன அலுவலர்முரளி ஆகியோர் ஆலோசனையின் பேரில், வனத்துறை சார்பில், குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா, ஆம்பூரான்பட்டி, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, குடுமிப்பட்டி, மத்தேட்டிப்பல்லி உள்ளிட்ட கிராமங்களில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. அதில், வன எல்லையில் நிலம் வைத்திருப்பவர்கள், நிலத்தை சுற்றி மின் வேலி அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Similar News