செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை கேனுடன் மனு கொடுக்க வந்த தொழிலாளி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நியாயமான முறையில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மண்எண்ணை கேனுடன் மனு அளிக்க வந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
குடியாத்தம் அருகே உள்ள ராமாலை தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவரது மனைவி முருகேஸ்வரி மற்றும் 3 மகள்களுடன் இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார்.
கலெக்டர் அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். ஒரு கேனில் மண்எண்ணை இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது சதீஷ்குமார் கூறுகையில்:- கடந்த 2016-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் எனக்கு கிராம உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது. நான் அதில் கலந்து கொண்டேன்.
அப்போது என்னிடம் ரூ.4 லட்சம் பணம் கொடுத்தால் வேலை தருவதாக தெரிவித்தனர். எனக்கு வசதி இல்லாததால் பணம் கொடுக்கவில்லை. அந்த வேலை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டனர்.
இது பற்றி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது செக்யூரிட்டி வேலைக்கு சென்று குறைந்த வருமானமே வருகிறது.
இதனால் எனது மனைவி, 3 மகள்களுடன் கஷ்டப்படுகிறேன். எனக்கு நியாயமான முறையில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக குடும்பத்துடன் தீக்குளிக்க மண்எண்ணை கொண்டு வந்தேன் என்றார். போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு அவர் சென்றார்.