செய்திகள்
வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்த காட்சி

வேலூரில் 2-வது நாளாக போலீசார் அதிரடி ஹெல்மெட் சோதனை

Published On 2020-03-07 15:51 IST   |   Update On 2020-03-07 15:51:00 IST
வேலூரில் இன்று 2-வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 700 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாநகர பகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இன்று 2-வது நாளாக வேலூர் நே‌ஷனல் சிக்னல் அருகே இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

போலீசாரின் சோதனையை பார்த்த வாகன ஓட்டிகள் பலர் கிரீன் சர்க்கிள் அருகே சாலையில் திடீரென வாகனங்களில் திரும்பி சென்றனர்.

இந்த சோதனை வேலூரில் தினமும் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இன்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 700 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News