செய்திகள்
திருமணம் செய்வதாக கூறி மைனர் பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது
லத்தேரி அருகே திருமணம் செய்வதாக கூறி மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் மைனர் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரை கற்பழித்தார். இதனால் மைனர் பெண் கர்ப்பமானார்.
இது பற்றி தகவலறிந்த பெண்ணின் பெற்றோர் ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது அவர் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் லத்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.