செய்திகள்
பரனூர் சுங்கச்சாவடி

சுங்கச்சாவடியை சூறையாடியபோது துப்பாக்கியால் சுட்டு விரட்டினோம்- இன்ஸ்பெக்டர் தகவல்

Published On 2020-01-28 14:47 IST   |   Update On 2020-01-28 15:37:00 IST
பரனூர் சுங்கச்சாவடியை சூறையாடியவர்கள் அங்கிருந்து கலைந்து செல்வதற்காக வானத்தை நோக்கி சுட்டதாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்

செங்கல்பட்டு:

பரனூர் சுங்கச்சாவடியை பயணிகள் சூறையாடிய போது பாதுகாப்புக்கு சென்ற போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு அவர்களை விரட்டி அடித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்படும் தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. கந்தன், செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், டவுண் இன்ஸ்பெக்டர் ஸ்டேன்லி அந்தோணி சாமி உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பஸ் பயணிகளும், பொது மக்களும் 200க்கும் மேற்பட்டோர் சுங்கச் சாவடியை சூறையாடியதால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும் கேட்கவில்லை.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதன் பின்னரே சுங்கச்சாவடியை சூறையாடியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டரிடம் கேட்டபோது, ‘சுங்கச்சாடியில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டேன். இதன் பின்னர் மோதலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்’ என்றார்.

Similar News