செய்திகள்
நிர்மலா தேவி

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்- வழக்கில் இருந்து விலகிய வக்கீல்

Published On 2020-01-10 07:37 GMT   |   Update On 2020-01-10 08:38 GMT
அரசியல் நெருக்கடி காரணமாக நிர்மலா தேவி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி வழக்கில் அவரது வழக்கறிஞர் விலகியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரது வழக்கில் ஆஜரான வக்கீல் பசும்பொன்பாண்டியன் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நிர்மலாதேவி சிறையில் இருந்தார். அவரை ஜாமினில் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து நான் சட்டப் போராட்டம் நடத்தி ஜாமினில் வெளியே கொண்டு வந்தேன். நிர்மலா தேவி உறவினர்களும் அவருக்கு ஒத்துழைப்புதர மறுத்து விட்டனர்.

தற்போது நிர்மலா தேவிக்கு அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அவர்கள் சொல்வதுபோல் நிர்மலாதேவி செய்து வருகிறார். எனவே நிர்மலாதேவி வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

இந்த வழக்கில் நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் அம்பு தான். அதனை எய்தவர்கள் யார்? என்றுதான் தெரிய வேண்டும்.

இந்த வழக்கில் உண்மை நிலையை அறிய வேண்டும் என்றால் வேறு மாநிலத்தில் வழக்கை நடத்த வேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும். அல்லது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்தினால் உண்மை தன்மை தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News