செய்திகள்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு- ஈரோட்டில் நாளை பா.ஜனதா சார்பில் பேரணி
ஈரோட்டில் நாளை (புதன்கிழமை) குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பாரதிய ஜனதா சார்பில் மாலை 4 மணிக்கு பேரணி நடக்கிறது.
ஈரோடு:
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக எதிர்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பதிலடியாக பாரதிய ஜனதா சார்பில் நாளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா சார்பில் பேரணி நடக்கிறது.
ஈரோட்டிலும் நாளை (புதன்கிழமை) குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பாரதிய ஜனதா சார்பில் மாலை 4 மணிக்கு பேரணி நடக்கிறது.
இந்த பேரணி ஈரோடு வ.உ.சி. பூங்கா (பஸ் நிலையம்) அருகே தொடங்கி சம்பத் நகர் கொங்கு கலையரங்கம் அருகே நிறைவுபெறுகிறது.
இந்த பேரணியில் மத்திய மின்சாரம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மந்திரி ஆர்.கே.சிங், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் மாலதி சீனிவாசன், பொதுச்செயலாளர் கே.எஸ். நரேந்திரன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேசிய இளைஞர் அணி துணை தலைவர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள், தலைவர்கள், அனைத்து அணியினர், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எனவே இந்த பேரணியில் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட செயலாளர் கே.பி.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.