உலகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலி

Published On 2026-02-19 05:09 IST   |   Update On 2026-02-19 05:09:00 IST
  • சீனாவில் பட்டாசு கடை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
  • இந்த விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பீஜிங்:

சீனாவில் வசந்த விழா என அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.

சீன ஜோதிடத்தின்படி இது 'குதிரை ஆண்டு' தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது தீய சக்திகளை விரட்டப் பட்டாசுகள் வெடிப்பது மரபாகும்.

இந்நிலையில், சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் ஜியாங்யாங் நகரில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடிவிபத்தால் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News