செய்திகள்
திருப்பத்தூர் தனி அலுவலர் சிவனருள் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தனி அலுவலர் ஆய்வு

Published On 2019-10-25 17:07 IST   |   Update On 2019-10-25 17:22:00 IST
திருப்பத்தூர் மாவட்ட தனி அலுவலர் சிவனருள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட தனி அலுவலர் சிவனருள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று டெங்கு பாதிப்பு குறித்து மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமாரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் மேலும் மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யும் இடம் மாத்திரை வழங்கும் இடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்பட்ட வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டார்.

அரசு மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்தோம் தற்போது மருத்துவமனையில் சிறுவர் சிறுமியர் உள்பட 37 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு  டெங்கு அறிகுறி எதுவும் இல்லை.

அனைத்து பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து உட்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய டயர் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அரசு டெங்கு ஒழிப்பு குறித்து தீவிரம் காட்டி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.22 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை ஆய்வு செய்து உடனடியாக முடிக்க உத்தரவிட்டார்.

டாக்டர்கள் பிரபாகரன், சிவக்குமார், குமரவேல், பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர்கள் விஜயகுமார், சங்கர், ஆறுமுகம் உடனிருந்தனர்

Similar News