செய்திகள்
கோப்பு படம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மருந்துகடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட காவலாளி பலி

Published On 2019-10-10 17:20 IST   |   Update On 2019-10-10 17:20:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே மருந்துகடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட காவலாளி சிறிது நேரத்தில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படப்பை:

நேபாளத்தை சேர்ந்தவர் அரிபாபு (வயது 46). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீசிங் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார். பின்னர் அரிபாபு மீண்டும் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அரிபாபு பரிதாபமாக இறந்தார்.

Similar News