செய்திகள்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்த காட்சி

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி - தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்

Published On 2019-09-19 17:58 GMT   |   Update On 2019-09-19 17:58 GMT
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாலாஜாநகரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாலாஜாநகரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி வரவேற்றார். கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சரால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பாக இ-பொது சேவை மையங்களின் செயல்பாடு பற்றிய புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அரசு தலைமை கொறடா, கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன் (செய்தி), எழிலரசன் (விளம்பரம்), அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News