செய்திகள்
நடிகர் விஜய்

சுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு

Published On 2019-09-19 17:22 GMT   |   Update On 2019-09-19 17:22 GMT
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள் என்றார்.
சென்னை:

விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசைப்படாதீங்க. அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க.

விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து யாரை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க.

பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்! சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள். இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.

பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வருத்தப்பட்ட அளவு நானும் வருத்தப்பட்டேன்.. என் போட்டோவ கிழிங்க, உடைங்க. என் ரசிகன் மேல கை வைக்காதீங்க.

என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க.

நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க. 

எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர்.
உழைத்தவர்களை மேடையில் ஏற்றிப் பார்க்கும் ரசிகர்கள் தான் முதலாளி என தெரிவித்தார்.
Tags:    

Similar News