செய்திகள்
போலீஸ் பாதுகாப்புடன் பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

நாகூர் பூச்சொரிதல் ஊர்வலத்துக்கு 2000 போலீசார் பாதுகாப்பு

Published On 2019-09-04 16:50 GMT   |   Update On 2019-09-04 16:50 GMT
ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நாகூர் பூச்சொரிதல் ஊர்வலத்துக்கு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் ஸ்ரீ சீராளயம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத திருவிழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் நடைபெறுவது வழக்கம். 

இந்தப் பூச்சொரிதல் ஊர்வலம் தங்கள் தெரு வழியாக செல்லக்கூடாது என ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஆண்டு கோவில் விழா மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு பூச்சொரிதல் ஊர்வலம் நடத்த பட்டினச்சேரி  கிராம மக்கள் பஞ்சாயத்தார்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சீராளம்மன் பூச்சொரிதல் நிகழ்ச்சி நேற்று  மாலை நடைபெற்றது. முன்னதாக திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜுலு தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் மற்றும் நாகை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்புடன் நாகூர் நாகநாதர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை எடுத்துக் கொண்டு ஜி மியாத் தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News