செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை - கோவையில் 25 பேர் கைது

Published On 2019-05-20 11:13 GMT   |   Update On 2019-05-20 11:13 GMT
கோவையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 25 பேரை கைது செய்த போலீசார் 262 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவை:

சூலூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

இதற்கிடையே கோவை புறநகர் பகுதிகளான பேரூர், தொண்டாமுதூர், சிறுமுகை, சூலூர், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 74 மது பானங்கள், ரூ.1,200 பணம் பறிமுதல் செய்யப்பட் டது. இதேபோல் கோவை மாநகர பகுதியான காட்டூர், சாய்பாபா காலணி, ராமநாத புரம், போதனூர், வெரைட்டி ஹால் ரோடு, பீளமேடு, சரவ ணம்பட்டி பகுதிகளில் மது விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் வந்தது.

அதனை தொடர்ந்து மது விற்பனை செய்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, அவர்களிடம் இருந்து 188 மது பாட்டில்கள் பறிமு தல் செய்யப்பட்டது. சூலூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக ளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவ தும் மது விற்றதாக 25 பேர் கைது செய்யப்பட்டு, மொத் தம் 262 மது பாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News