செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை கடத்தி - 3 பவுன் செயின் பறிப்பு

Published On 2019-05-13 17:31 IST   |   Update On 2019-05-13 17:31:00 IST
மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை கடத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சியை அடுத்த மணவிளையைச் சேர்ந்த கில்டாகேதரின்(வயது 35). சம்பவத்தன்று ஊரப்பனையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்குச் செல்வதற்காக நடந்துச் சென்று கொண்டிருந்தார்.

மணவிளை இசக்கி அம்மன் கோவில் அருகே நடந்து சென்ற போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கில்டாகேதரினிடம் பேச்சு கொடுத்து, தெரிந்தவர் போல் நடித்தார். மேலும் போகும் வழியில் இறக்கி விடுவதாக கூறினார்.

இதை நம்பிய கில்டா கேதரின் மோட்டார் சைக்கிளில் ஏறினார். சிறிது தூரம் சென்றதும் ஆள் இல்லாத இடத்திற்கு வந்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்தார்.

இதில் சுதாரித்துக் கொண்ட கில்டா கேதரின் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மேலும் திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

அதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன் கில்டாகேதரினை மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி விட்டு விட்டு 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கில்டாகேதரின் கூறிய அடையாளங்களை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையனை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா எதுவும் உள்ளதா? எனவும், அதில் கொள் ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News