செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே தண்ணீர் பிடிக்க சென்ற இளம்பெண் மாயம்

Published On 2019-05-12 19:50 IST   |   Update On 2019-05-12 19:50:00 IST
ஆண்டிப்பட்டி அருகே தண்ணீர் பிடிக்க சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகள் ஜெயப்பிரியா (வயது 17). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து ஜெயப்பிரியா தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்றார். 

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் ஜெயப்பிரியா அங்கு செல்ல வில்லை. இரவு வரை மகள் வீடு திரும்பாததால் கவலையடைந்த அவரது தந்தை ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயப்பிரியாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News