திருத்தணியில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகர்-மகன் உள்பட 4 பேர் கைது
பள்ளிப்பட்டு:
திருத்தணி, பஜார் வீதி மா.பொ.சி. சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பைப் ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. அதனை போலீசார் நிறுத்துமாறு கூறியும் டிராக்டரை டிரைவர் தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சரவணன், டிராக்டரை விரட்டிச்சென்று ஒரு ஒர்க்ஷாப்பில் மடக்கி பிடித்தார்.
இதுபற்றி அறிந்ததும் டிராக்டர் உரிமையாளரான அகூரை சேர்ந்த அ.தி.மு.க. ஊராட்சி செயலர் வாசு, அவரது மகன் சசிதரன் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏற்பட்ட மோதலில் வாசு, அவரது மகன் சசிதரன், டிராக்டர் டிரைவர் தெக்கலூரை சேர்ந்த வெங்கடேசன், கடை ஊழியர் தாஸ் ஆகியோர் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை தாக்கினர். மேலும் போலீஸ் நிலையத்திலும் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து சப்-இன்ஸ் பெக்டர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசு, சசிதரன், வெங்கடேசன், தாஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.