செய்திகள்

குண்டர் சட்டத்தில் 15 முறை சிறை சென்ற பிரபல ரவுடி உள்பட 5 பேர் துப்பாக்கி முனையில் கைது

Published On 2019-04-30 11:34 GMT   |   Update On 2019-04-30 11:34 GMT
குண்டர் சட்டத்தில் 15 முறை சிறை சென்ற பிரபல ரவுடி உள்பட 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

பெரம்பூர்:

புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்கிற ஆற்காடு சுரேஷ் (45). இவன் மீது வக்கீல் பகவத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உள்பட 7 கொலை வழக்குகள் உள்ளன. இவை தவிர புளியந்தோப்பு போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கூலிப்படை தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

குண்டர் சட்டத்தின் கீழ் 15 நாள் சிறை சென்று வந்துள்ள சுரேஷ் புளியந்தோப்பு போலீசார் தொடர்ந்த பல வழக்குகளில் ஆஜர்ஆகவில்லை. எனவே, அவனை புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரவுடி சுரேஷ் புளியந்தோப்பில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்கு நேற்று இரவு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, புளியந்தோப்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது தப்பி ஓட முயன்ற ரவுடி சுரேசை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவனுக்கு பாதுகாப்பாக வந்த லொடுக்கு மாரி (32), சந்திரகாந்த் (28), அருண் (22), ராஜா (21), பிரபாகரன் (21) ஆகியோரையும் போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் சுரேசுக்கு பாதுகாப்பாக வந்தவர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

5 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்த புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். இந்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடி சுரேஷ் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News