செய்திகள்

வேப்பந்தட்டையில் வேளாண்மை கல்லூரி அமைய பாடுபடுவேன்- பாரிவேந்தர் தேர்தல் வாக்குறுதி

Published On 2019-04-09 14:28 GMT   |   Update On 2019-04-09 14:28 GMT
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வேப்பந்தட்டை பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வேப்பந்தட்டை பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வேப்பந்தட்டை பகுதியில் அதிகமானோர் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன். மேலும் ஏற்கனவே வேப்பந்தட்டை பகுதியில் பல்வேறு ஊர்களில் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியின் சார்பில் மருத்துவ முகாம்கள் இலவசமாக நடத்தப்பட்டு பலர் பயனடைந்துள்ளார்கள். எனவே இது போன்ற நலத்திட்டங்கள் தொடர்ந்து உங்களை வந்து சேர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பாலையூர், தொண்டப்பாடி, நெய்க்குப்பை, வெண்பாவூர், பெரியவடகரை, மாவிலிங்கை, நூத்தப்பூர், வெள்ளுவாடி, காரியானூர், திருவாலந்துறை, இனாம் அகரம், அயன்பேரையூர் ஆகிய ஊர்களில் திறந்தவெளி வாகனத்தில் பாரிவேந்தர் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது தி.மு.க மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் அன்பழகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News