செய்திகள்

ஹெராயின் வழக்கில் இலங்கை தொழிலதிபருக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை

Published On 2019-04-09 05:38 GMT   |   Update On 2019-04-09 05:38 GMT
வங்கி லாக்கரில் 1.14 கிலோ ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த இலங்கை தொழிலதிபருக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HeroinSeizure #ChennaiCourt #HeroinCase
சென்னை:

சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2002ம் ஆண்டு சென்னையில் 44.8 கிலோ போதைப்பொருளை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த அசோக் குமார் 2009-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 11 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேசமயம், 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசோக் குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்த 1.14 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அய்யப்பன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, அசோக் குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.  #HeroinSeizure #ChennaiCourt #HeroinCase
Tags:    

Similar News