செய்திகள்

கொடுப்பது அதிமுக, அதை கெடுப்பது திமுக: கரூரில் தம்பிதுரை பேச்சு

Published On 2019-04-08 14:47 GMT   |   Update On 2019-04-08 14:47 GMT
ஏழை-எளியோருக்கு ரூ.2,000 வழங்குவதை தி.மு.க. வழக்கு போட்டு தடுக்கிறது. ஆகவே கொடுப்பது அ.தி.மு.க. என்பதையும், தடுப்பது தி.மு.க. என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள் என்று தம்பிதுரை பேசினார். #thambidurai #admk #dmk
கரூர்:

கரூர் பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரும், பாராளு மன்ற துணை சபாநாய கருமான தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சென்று கரூர் தொழிற்பேட்டை, பசுபதிபாளையம், வடக்கு காந்திகிராமம், ராமானூர், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, தொழிற்பேட்டை, மூலக் காட்டானூர், நரிகட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர். 

அப்போது பிரசார வாகனத்தில் நின்றபடியே தம்பிதுரை பேசியதாவது:-

பல்வேறு தரப்பிலிருந்தும் மோடிக்கு ஆதரவு பெருகி வருவதால் காங்கிரஸ்- தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதன் காரணமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதிலும் 45 கல்லூரிகளை நான் வைத்திருப்பதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். 45 கல்லூரிகள் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். அந்த குற்றச்சாட்டு பொய் என்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவாரா?. ஏழை-எளியோருக்கு ரூ.2,000 வழங்குவதை தி.மு.க. வழக்கு போட்டு தடுத்தது. ஆகவே கொடுப்பது அ.தி.மு.க. என்பதையும், தடுப்பது தி.மு.க. என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். 

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசும்போது, ஜெயலலிதாவின் உன்னத திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். கஜானாவை காலி செய்த காங்கிரஸ்-தி.மு.க.வால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது என்றார். இதில் கீதா எம்.எல்.ஏ., நகர செயலாளர் நெடுஞ்செழியன், பசுவை சிவசாமி, தானேஷ் என்கிற முத்துக்குமார் மற்றும் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். #thambidurai #admk #dmk
Tags:    

Similar News