செய்திகள்
விபத்தில் பலியான மூதாட்டி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்தபடம்.

பெண்ணாடம் அருகே டிராக்டர் மோதி மூதாட்டி பலி

Published On 2019-04-02 16:24 IST   |   Update On 2019-04-02 16:24:00 IST
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வேதவள்ளி (வயது 74).

இன்று காலை வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது பெண்ணாடத்தில் இருந்து கெள்ளாத்தான்குறிச்சியை நோக்கி ஒரு டிராக்டர் வேகமாக வந்தது. அந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக வேதவள்ளி மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வேதவள்ளி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வேதவள்ளி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வேதவள்ளியின் மகன் வெங்கடேசன் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக பெண்ணாடம் தெற்கு ரத வீதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாலுவை (52) போலீசார் கைது செய்தனர்.

Similar News