செய்திகள்

கலவரத்தை தூண்டியதாக திருமுருகன் காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு

Published On 2019-03-30 03:19 GMT   |   Update On 2019-03-30 03:19 GMT
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.#May17movement #ThirumuruganGandhi
சென்னை:

சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம் எனும் சமூக அமைப்பினை துவக்கினார். இந்த இயக்கத்தினை தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கினார்.  இது தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து தமிழர் உரிமைகளைச் சார்ந்து இயங்கும் சமூக அமைப்பாகும்.



இந்த அமைப்பின் தலைவரும் , ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் உரையாற்றிய திருமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவறான செய்திகளை பரப்பியதாகவும், பொது மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மே 17 இயக்கத்தின் இதர ஆதரவாளர்கள் பெரியசாமி, அருள் முருகன், டைசன் ஆகியோரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #May17movement #ThirumuruganGandhi 

Tags:    

Similar News