செய்திகள்

சிறுமி கொலை வழக்கு - போலீஸ் வளையத்தில் 4 வாலிபர்கள்

Published On 2019-03-29 14:14 IST   |   Update On 2019-03-29 14:14:00 IST
கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டை சேர்ந்த 4 பேர், ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு பதில் கூறுவதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம்:

கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 60 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயகுமார், கவுதமன், சந்தோஷ்குமார், துரைசாமி ஆகிய 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்றனர். முதலில், சமபவத்தன்று நாங்கள் ஊரிலேயே இல்லை என்றனர். பின்னர் மாயமான சிறுமியை நாங்களும் சேர்ந்து தான் தேடினோம் என மாற்றி கூறினர். இதனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் துருவி, துருவி விசாரித்தனர்.

நேற்று முன்தினம் இரவு முதலே அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் 4 பேரும், ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு பதில் கூறுவதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கை கண்டித்தும், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை கண்டித்தும் துடியலூர் பகுதிகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பு சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

நேற்று மாலை கணுவாய் பஸ் நிறுத்தம் அருகே திரண்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பினர், சிறுமியை கொன்றவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுதொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த தேவராஜ், சரவணன் மற்றும் சிலர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News