செய்திகள்
வேதாரண்யம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே பல வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கீழ ஆறுமுககட்டளையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் செந்தில்குமார் (வயது 33). இவர் மீது வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம் பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் சுரேஷ்குமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்தில்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.