சினிமா செய்திகள்

மங்காத்தா பட போஸ்டர்களை எவ்வித எழுத்துக்களும் இல்லாமல் பகிர்ந்த சன் பிக்சர்ஸ்

Published On 2026-01-24 21:43 IST   |   Update On 2026-01-24 21:43:00 IST
  • மங்காத்தா திரைப்படம் நேற்று ரீரிலீஸானது.
  • ரசிகர்களின் அமோக வரவேற்பை மங்காத்தா பெற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற மங்காத்தா திரைப்படம் நேற்று ரீரிலீஸானது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ரீ ரிலீசில் கில்லி படம் படைத்த சாதனைகளை முறியடித்து வசூல் சாதனை படைத்தது வருகிறது.

இந்நிலையில், அஜித்குமார் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மங்காத்தா போஸ்டர்களை எந்தவித எழுத்துகளும் இல்லாமல் Clean போஸ்டர்களாக சன் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ளது.

இந்த போஸ்டரைகளை பலரும் டவுன்லோடு செய்து மொபைல் வால்பேப்பராக வைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News