செய்திகள்

உத்தனபள்ளி அருகே வாகன சோதனையில் தொழிலதிபரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் பணம் பறிமுதல்

Published On 2019-03-18 09:28 GMT   |   Update On 2019-03-18 09:28 GMT
உத்தனபள்ளி அருகே இன்று நடந்த வாகன சோதனையில் தொழிலதிபரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராயக்கோட்டை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகன சோதனை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள உத்தனப்பள்ளி பஸ் நிலையம் அருகே இன்று காலை தோட்டக்கலை உதவி இயக்குனர் சிதம்பரம் தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனை ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக கெலமங்கலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், காந்திநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான செல்வராஜ் என்பது தெரியவந்தது. அவர் பெட்ரோல் மற்றும் போர்வெல் வாகனமும் சொந்தமாக வைத்திருப்பது தெரிய வந்தது.

தொழிலதிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரியிடம் உரிய ஆவணங்களை காட்டி பின்னர் இந்த பணத்தை கொண்டு செல்லலாம் என்று தொழில திபரிடம் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News