செய்திகள்

நாகை பகுதியில் 4 ஓட்டல்களில் 10 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்

Published On 2019-03-16 14:17 GMT   |   Update On 2019-03-16 14:17 GMT
நாகை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #PlasticBan

நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த நாகூரில், புதுமனைத்தெரு, பீரோடும் தெரு, தர்கா அலங்கார வாசல் பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகார் சென்றது.

இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி உத்தரவின்படி மேற்குறிப்பிட்ட பகுதியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சுகாதார மற்ற சூழலில் உணவு பொருட்களை விற்பனை செய்த 4 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நோட்டீசுகள் வழங்கப்பட்டன. 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால் மேற்படி சட்டத்திற்கு உட்பட்டு ஓட்டல் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. #PlasticBan

Tags:    

Similar News