செய்திகள்

மதுரை தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

Published On 2019-03-16 02:57 GMT   |   Update On 2019-03-16 02:57 GMT
மதுரையில் பாராளுமன்ற தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய வழக்கை மதுரையில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. #ParliamentElection #HighCourtMaduraiBench
மதுரை:

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மதுரையில் சித்திரை தேரோட்ட திருவிழா நடக்கும் நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக பார்த்தசாரதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் தேதியை ஏன் மாற்றக்கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தது. இதுபற்றி தேர்தல் கமிஷன் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் தேர்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டில் மட்டுமே தொடர வேண்டும் என்று நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மதுரையில் பாராளுமன்ற தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய வழக்கை மதுரையில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி உள்ளனர். #ParliamentElection #HighCourtMaduraiBench
Tags:    

Similar News