தேனி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
கூடலூர்:
தேனி அருகே கூடலூர் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). கூலித் தொழிலாளி. கூடலூர் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ்நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் சீனிவாசன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி அருகே உத்தமபாளையம் ராயப்பன் பட்டியைச் சேர்ந்தவர் ராசு (வயது 57). சம்பவத்தன்று அணைப்பட்டி - ராயப்பன்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ராசு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.