செய்திகள்

அதிமுக நேர்காணல் - திருவண்ணாமலை-ஆரணியில் போட்டியிட 100 பேர் ஆர்வம்

Published On 2019-03-13 10:03 GMT   |   Update On 2019-03-13 10:03 GMT
திருவண்ணாமலை-ஆரணி தொகுதியில் போட்டியிட 100 பேர் ஆர்வமுடன் இருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்படுகிறது. #ParliamentElection #ADMK
திருவண்ணாமலை:

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது.

மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த அ.தி.மு.க.வினரிடம் முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

நேற்று திருவண்ணாமலை, ஆரணி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை தொகுதிக்கு நடந்த நேர்காணலில் வனரோஜா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் உள்பட 43 பேர் பங்கேற்றனர்.

ஆரணி தொகுதிக்கு நடந்த நேர்காணலில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா உள்பட 57 பேர் கலந்து கொண்டனர்.

2 தொகுதியில் போட்டியிட 100 பேர் ஆர்வமுடன் இருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்படுகிறது. #ParliamentElection #ADMK

Tags:    

Similar News