செய்திகள்

சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 6 அடி உயர்வு

Published On 2019-03-02 16:42 IST   |   Update On 2019-03-02 16:42:00 IST
நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரண மாக சோத்துப்பாறை அணை நீர் மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்தது. #ChottuparaiDam
கூடலூர்:

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் பெரியகுளம், தாமரைக்குளம், மேல் மங்கலம், ஜெயமங்கலம், வடுகபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வந்தது. இதனால் குடிநீருக்காக மட்டும் 3 கன அடி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக பெரியகுளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து 75 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. நேற்று 86.26 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி அது 92.49 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 114.60 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிறது. 230 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 47 அடியாக உள்ளது. வரத்து இல்லை. குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 310 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.45 அடியாக உள்ளது வரத்து இல்லை. 35 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் 1.8, மஞ்சளாறு 28, சோத்துப்பாறை 48 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ChottuparaiDam

Similar News