செய்திகள்

மதுரையில் திருமண ஆசை காட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2019-03-02 15:40 IST   |   Update On 2019-03-02 15:40:00 IST
மதுரையில் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக திருமணமான வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:

மதுரை மீனாட்சிபுரம் முல்லை நகரைச் சேர்ந்தவரின் மகள்  தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், மீனாம்பாள் புரம் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த ஜெகன் (24) என்பவருடன் 2 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டது. அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்ற ஜெகன், திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையில் அவருக்கு ஏற்கனவே திருமணமான விவரம் தற்போது எனக்கு தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஜெகனை கைது செய்தனர்.

Similar News