செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2019-02-27 10:17 GMT   |   Update On 2019-02-27 10:17 GMT
மேட்டூர் அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #Metturdam
மேட்டூர்:

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கடந்த சில நாட்களாக 100 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 28 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் 68.67 அடியில் இருந்து 68.55 அடியாக குறைந்து விட்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. #Metturdam

Tags:    

Similar News