செய்திகள்

கொடைக்கானல் அருகே குதிரையை அடித்து கொன்ற புலி

Published On 2019-02-23 10:14 GMT   |   Update On 2019-02-23 10:14 GMT
கொடைக்கானல் அருகே குதிரையை புலி அடித்துக் கொன்றதாக ஏற்பட்ட பீதியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வனப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் அடிக்கடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வீட்டு கால்நடைகளை அடித்து காயப்படுத்தி சென்றதும் மக்களை மிரட்டி செல்வதும் நடந்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக புலியூர், டைகர் சோலை, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வன விலங்குகள் காட்டுத் தீக்கு பயந்து கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன.

வில்பட்டியை அடுத்துள்ள புலியூர் பகுதியைச் சேர்ந்த சேகர் தனக்கு சொந்தமான குதிரையை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மீண்டும் காலையில் குதிரையை பார்த்த போது அதை காணவில்லை.சிறிது தூரம் தேடிச் சென்று பார்த்த போது மர்ம விலங்கு தாக்கி இறந்தது கிடந்தது. குதிரையின் கழுத்தில் ஆழமான காயம் இருந்ததால் புலி கடித்து கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் ஹக்கீம் சம்பவ இடத்துக்கு வந்து குதிரையின் உடலை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

வனத்துறையினர் தெரிவிக்கையில், புலி நடமாட்டம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. குதிரை எவ்வாறு இறந்தது என விசாரணை நடத்தப்படும் என்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்லை பகுதியில் புலி வந்து சென்றதற்கான கால்தடம் பதிவாகி இருந்தது அதே போல் தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கால் தடத்தால் விலங்குகள் இடம் பெயர்ந்து வந்திருக்கலாம் என பொதுமக்கள் கூறும் போதும் வனத்துறையினர் அதனை மறுத்து வருவது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Tags:    

Similar News