செய்திகள்

ஒருதலை காதல்: பிளஸ்-2 மாணவியிடம் பள்ளிக்கூட வாசலில் அத்துமீறல் - வாலிபர் கைது

Published On 2019-02-21 11:40 GMT   |   Update On 2019-02-21 11:40 GMT
நாகர்கோவில் அருகே பிளஸ்-2 மாணவியை காதலிக்குமாறு அத்துமீறிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

அருமனை அருகே மானங்கன்னி விளையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

அந்த மாணவியை அருமனை வட்டவிளை பகுதியைச் சேர்ந்த ரெஜின் (வயது 25) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இதை அந்த மாணவி தனது பெற்றோரிடம் சென்று கூறினார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் ரெஜின் வீட்டிற்குச் சென்று கண்டித்தனர். நேற்று முன்தினம் மாணவி, பள்ளிக்கூடத்திற்கு சென்றபோது, பள்ளிக்கூட வாசலில் வைத்து மாணவியை ரெஜின் தடுத்து நிறுத்தினார். தன்னை காதலிக்குமாறு கூறினார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரெஜின், மாணவியை கன்னத்தில் அடித்ததுடன் கையை பிடித்து இழுத்தார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார். நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார்.

இதையடுத்து அந்த மாணவி, மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ரெஜின் மீது போஸ்கோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெஜினை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரெஜின் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரெஜின் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News