செய்திகள்

கொடைக்கானலில் கஞ்சா பதுக்கி வைத்த பிரபல ரவுடிகள் கைது

Published On 2019-02-20 07:40 GMT   |   Update On 2019-02-20 07:40 GMT
கொடைக்கானலில் கஞ்சா பதுக்கி விற்பனைக் காக வைத்திருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் போலீசார் பெருமாள்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது 3½ கிலோ கஞ்சாவை 2 பேர் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மதுரை சின்ன வளையன்குளத்தைச் சேர்ந்த மூர்த்தி (வயது 38), அவரது கூட்டாளி செந்தில் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மூர்த்தி கொடைக்கானல் நகரில் கடந்த பல மாதங்களாக கட்டப்பஞ்சாயத்து, ஆட்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, ஆக்கிரமிப்பு செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இவர் மீது மதுரையில் பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொடைக்கானல் அண்ணாநகர் முந்திரி தோப்பைச் சேர்ந்த செந்தில் என்பவரை அடி ஆளாக வைத்துக்கொண்டு கொடைக்கானலில் தொடர்ந்து இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது கஞ்சா பதுக்கிய வழக்கில் கொடைக்கானல் போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வத்தலக்குண்டு - கொடைக்கானல் ரோட்டில் 24 மணி நேர செக் போஸ்ட் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் அவர்களிடம் அத்து மீறும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இது போன்ற நிலையில் கொடைக்கானல் சோதனைச்சாவடியை கடந்து கஞ்சா விற்பனை செய்வது எவ்வாறு சாத்தியமாயிற்று என போலீசார் விசாரணை நடத்த வேண்டும். இது போன்ற சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News