செய்திகள்

திருமங்கலம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2019-02-19 15:56 IST   |   Update On 2019-02-19 15:56:00 IST
திருமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
பேரையூர்:

சேலம் மாவட்டம், பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் ஆனந்த் (வயது 28). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கார்த்திக் ஆனந்துக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது.

நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த நண்பர் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு இன்று அதிகாலை கார்த்திக் ஆனந்த் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், கார்த்திக் ஆனந்த் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிச் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News