செய்திகள்

தேர்தலை சந்திக்க பிரம்மாண்ட கூட்டணி அமைத்து வருகிறோம்- தமிழிசை பேட்டி

Published On 2019-02-14 07:15 GMT   |   Update On 2019-02-14 07:15 GMT
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பிரம்மாண்ட கூட்டணி அமைத்து வருகிறோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #bjp #pmmodi #parliamentelection

ஈரோடு:

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகிறது. பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, திருப்பூரில் மெட்ரோ ரெயில் திட்டம், ஈ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.

பிரதமரை தொடர்ந்து தேசிய தலைவர் அமித்ஷா ஈரோடு வர உள்ளார். தொடர்ந்து மத்திய மந்திரிகள் மூத்த தலைவர்கள் தமிழகத்துக்கு வர உள்ளனர். இதனால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ மந்திரியும் நானும் அங்கேயே 3 நாட்கள் தங்கி தேவையான உதவிகளை செய்து வந்தோம்.


வைகோ தமிழகத்துக்கு என்ன நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார். அவர் பிரதமர் வரும்போது கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவது வெற்று போராட்டம் ஆகும். அந்த போராட்டம் ஊர்ந்து போகும் யானையின் பலத்தை சுண்டெலியால் தடுத்து விட முடியாது.

முதல்வர் ஏழை குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் அறிவித்தது நல்ல திட்டம் அதை வரவேற்கிறேன். தமிழக முதல்வர் மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

கூட்டணி பற்றி பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும். எங்களுக்கு பொதுவான எதிரி தி.மு.க.வும் காங்கிரசும் தான் தமிழகத்தை பொருத்தவரை பலமான பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து வருகிறோம். தேர்தலில் வெற்றி பெறுவோம்.

பாரதீய ஜனதாவுக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. ஒரு எதிர்கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறி உள்ளார். இதன் மூலம் மோடியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தமிழிசை கூறினார். #tamilisai #bjp #pmmodi #parliamentelection

Tags:    

Similar News