செய்திகள்

கரும்பு தோட்டத்தில் கொன்று புதைப்பு- மாணவி எலும்புக்கூடு தடயவியல் சோதனை

Published On 2019-02-12 09:16 GMT   |   Update On 2019-02-12 09:16 GMT
பள்ளிப்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவி கரும்பு தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:

பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கட்டிட மேஸ்திரி.

இவரது மகள் சரிதா (வயது 15). அப்பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி பள்ளிக்கு சென்ற சரிதா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர், போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள கீச்சலம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் மாணவி சரிதா கொன்று புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது எலும்புக் கூடு மற்றும் பள்ளிச்சீருடை இருந்தது.

பொதட்டூர்பேட்டை போலீசார் மாணவியின் எலும்புக்கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் சரிதாவின் கொலுசு, கம்மல் இருந்தன. திருவள்ளூர் மாவட்ட தடயவியல் நிபுணர் நளினா மற்றும் அதிகாரிகள் எலும்புகளை பரிசோதனை செய்தனர்.

பின்னர் சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாணவி கொலை தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நிலத்தகராறில் மாணவி கொலை செய்யப்பட்டாரா? மாணவியுடன் நெருங்கி பழகியவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். மாணவியின் தாயிடமும் விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News